29 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-31


பொருளாதார வீழ்ச்சியும் தொடரும் வேலை வாய்ப்பின்மையும் வீழ்ந்து போகும் திவீர இனவாத முன்னெடுப்பும் இலங்கையில் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள்  இனியும் குடித்தனம் நடத்தமுடியாது என்ற சிந்தனையின் வெளிப்பாட்டில் நெளிநாட்டுக்கு வேலை என்று போகும் அவல நிலைக்கு காரணம் தூரநோக்கற்ற மூவின அரசியல்வாதிகளின் இனவாத வெறியின் வெற்றுக்கோஸங்கள் என்றால் மிகையில்லை !

வீட்டில் அடுப்பு எரியவேண்டி அரபுலகம் செல்லும் பணிப்பெண்களும் அன்றாட உடல் ,உள தினக்கூலி வேலை என்று ஆண்களும் அரபுலகம் சென்ற பின் அங்கு அல்லல் உறும் வாழ்க்கைப்போராட்டங்களை எல்லாம் அதிர்ச்சிசெய்திகளாக, அன்பவங்களாக  ,கேட்டாளும் ,பார்த்தாலும் அரபுலகத்தாரின் பணத்துக்கு இருக்கும் மதிப்பு இந்த பாழப்போன உயிருக்கு இல்லை என்பதை பலதேசம் பார்த்த இந்த சாஹானா அப்பாவியின் மரணம் கூட மாற்றவில்லை மான்புமிகு மந்திரிகளின் மனதை!

 இதையெல்லாம் தொடர்ந்து நாளிதழலில் எழுத வேண்டிய கரங்கள் எல்லாம் இலியானவின் இடை பற்றி தமிழிலும் ,

இனவாத சிந்தனையை இறைக்கும் இந்த சிறுகூட்டத்தினரை!

 இன்றைய தலைப்பில் தலைவாபோல எழுதும் இனவாத சிங்களநாளேடுகளின் நாட்டாமைத்தனத்தையும் என்ன என்று சொல்லுவது .

இவர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்லதைச் சொல்லும் நடுநிலையாளர்களா? நான் அறியேன் கண்ணுக்கு எட்டியதூரம் வரை விடியல் இல்லை என்பதைச் சொல்வது போல வெளிநாட்டுக்கு போக காத்திருக்கும் அப்பாவிகள் பலரைப்பார்க்கும் போது !


தோட்டத்துறையின் நம்நிலையை எண்ணி என்ன செய்வது என்ற நினைபில் காத்திருந்தான் கட்டுநாயக்கா விமாணநிலையத்தில் கதவு எண்-7 வழியாக வெளியேறி சிரிலங்கன் எயார்லனைன்ஸ் உடாக குவைத் நாட்டுக்கு செல்வதுக்கு பாபு !

இன்னும் சிலநிமிடத்தில் கதவு திறக்கப்படும் என்ற அறிவிப்பு மனதில் இன்னும் சிலநிமிடத்தில் ஆட்சி பறிபோகும் என்ற  ஜனாதிபதியின் நிலைபோல படபடப்பை கொடுத்தது!


இந்த இரண்டுநாளுக்குள் எத்தனை மாற்றம் ஒரு நாள் முதல்வன் போல திடீர் என்று நாளையே நீங்கள் போகலாம் என்ற காதரின் உதவி அரபுலகம் செல்வதுக்காக துருதமாக பணம் அனுப்பிய சேகரின் அன்பு.

 திடீர் என்று வெளிநாடு போறேன் என்றதும் திகைத்துப்போன தந்தை ,மகன் திருந்தக்கிடைத்த சந்தர்ப்பம் என்ற தாயின் நினைப்பு ,அண்ணாவுக்கு நல்ல வாழ்வுகிடைத்துவிட்டது இனி என் படிப்புக்கு கவலையில்லை என்ற சங்கவி ,நல்ல வாய்ப்பு தொலைக்காதீங்க அண்ணா என்ற தம்பி விமலன் ,எல்லாரையும் அலைபேசியில் ஆட்டிவிக்கும் பாம்பாட்டி வித்தை  போல எல்லாரையும் உரிமையோடு ஆட்டிவிக்கத் தெரிந்த நண்பன் சேகர் என எதையும் நினைச்சுப்பார்க்க முடியுது இல்லை .

என்ன இருந்தாலும் என் ஒரு அழைப்புக்கோ, செய்திப்பதிவுக்கோ கூட பதில் தராமல் இருக்கும் மிரூனாவை நினைக்கும் போதுதான்!

 காதலைக் கடந்து கோபம் வருகின்றது நேரில் பார்க்க முடியாமல் வேலை மாரி எப்படி துணிந்து வவுனியா போனால்?
 எதுவுமே தெரியல இந்தப்பெண்களே எல்லாம் மோசம்தான்!

துளசியின் என் மீது மோகப் பொய்க்கு இருக்கும் மரியாதை உயிருக்கு உயிராக நேசிக்கும் எனக்கு இல்லையே ?அவள் என்னை விரும்புவது நான் அறியவில்லை. அன்று வத்தளையில் பார்ட்டிக்கு வந்தபின் ஒன்றாகப்போனோம் .மிருனாவை மட்டக்குளியில் விட்டுவிட்டு துளசியை அவளின் விடுதியில் சேர்த்துவிட்டு நிதானத்துடன் தான் என் அறைக்கு வந்தேன்.

 இடையில் தன்னிடம் எல்லைமீறி நடக்க முயன்றான் என்று என் மிரூனாவிடம் சொல்லியதை வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் பேதை போல என்னையும் அப்படி நினைத்துவிட்டாளே மிரூனா ?என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு கைபேசியின் அழைப்பு சிந்தனையை குழைத்தது !

ஹாலே என்ன மச்சான் பிளைட் ரெடியா, என்று மறுமுனையில் மீண்டும் சேகர்.

 இந்த இரண்டுநாளில் இவனின் அழைப்புக்கள் எல்லாம் இடைவிடாத இசைபோல இருக்கு இல்லை மச்சான் இன்னும் 5 நிமிடம் தான் இருக்கு வெளியேற குடியகழ்வு கடந்து ஏறும் நிலையில் காத்து இருக்கின்றேன் .

ஓக்கேடா சந்தோஸமாக் போ எதையும் நினைச்சு துஸ்ரக்கனவு போல மனசைக்குழப்பிக்காத  மீண்டும்  குவைத் போய்ச்சேர்ந்த பின்  நேரம் கிடைக்கும் போது பேசு என்னோடு பாபு!

நன்றிடா மச்சான் சேகர் !
உனக்கு எப்படி மறுஉதவி செய்யப்போறன் என்று தெரியல ?
என்னக்கு உதவி தேவைப்பாட்டள் நிச்சயம் கேட்கின்றேன் .ஆனால் எந்த நிலையிலும் மிரூனாவை கைவிடாத.

 அதுதான் நீ எனக்குச் செய்யும் பிரதி உபகாரம்  .

அவளைப்பற்றி மட்டும் பேசாத மச்சான் .என் உயிரே என்னுள்னிருந்து விலகும் நொடி போல அவள் தந்த வலிகள் அதிகம்டா.

 இந்த நாட்டைவிட்டுப்போகும் என்னை வழியணுப்பக்கூட வரவில்லை அதிகபட்சம் ஒரு கைபேசி அழைப்பில் கூட வாழ்த்தியிருக்கலாம் .நீ வெளிநாட்டில் இருந்து எத்தனை தரம் பேசிவிட்டாய் அவள் உள்நாட்டில் இருந்து ஒரு வார்த்தை ஒரு குறுஞ்செய்தி அவளை மறக்கணும் இனி!


இல்லை மச்சான் எல்லாம் உனக்கு நேரம் வரும்போது சிலதைச் சொல்லுகின்றேன் முதலில் நல்ல படியாக குவைத் போய்ச் சேர்!

தொடரும்!

6 comments :

Unknown said...

வெளிநாட்டு வாழ்க்கை இங்கு சொகுசாக உலா வரும் அமைச்சர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணுக்கு எட்டியதூரம் வரை விடியல் இல்லை என்பதைச் சொல்வது போல வெளிநாட்டுக்கு போக காத்திருக்கும் அப்பாவிகள் பலரைப்பார்க்கும் போது !//

மனதில் எழும்பும் வலியை எதைக் கொண்டு சரி செய்வதென்றே புரியவில்லை மக்கா உங்கள் எழுத்துகளை படிக்கும் போது.

Unknown said...

அய்,செங்கோவி குடியிருக்கிற ஊருக்குப் போறார்!///அரபுலகில் கொழிக்கும் எண்ணெய்,எரிவாயுப் பணத்தால் எத்தனை உயிர்களையும் காவு கொள்ள முடியும்!

தனிமரம் said...

வெளிநாட்டு வாழ்க்கை இங்கு சொகுசாக உலா வரும் அமைச்சர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை//வாங்க சக்கரக்கட்டி ஐயா முதல் முறை இந்த தனிமரம்வலைக்கு வந்து இருக்கும் உங்களுக்கு ஒரு பால்க்கோப்பி முதலில் குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கண்ணுக்கு எட்டியதூரம் வரை விடியல் இல்லை என்பதைச் சொல்வது போல வெளிநாட்டுக்கு போக காத்திருக்கும் அப்பாவிகள் பலரைப்பார்க்கும் போது !//

மனதில் எழும்பும் வலியை எதைக் கொண்டு சரி செய்வதென்றே புரியவில்லை மக்கா உங்கள் எழுத்துகளை படிக்கும் போது.//ம்ம் என்ன செய்வது அண்ணாச்சி !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மனோ அண்ணாச்சி!

தனிமரம் said...

அய்,செங்கோவி குடியிருக்கிற ஊருக்குப் போறார்!///அரபுலகில் கொழிக்கும் எண்ணெய்,எரிவாயுப் பணத்தால் எத்தனை உயிர்களையும் காவு கொள்ள முடியும்!

30 August 2013 02:39 Delete//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.