08 August 2013

நண்பனை வாழ்த்துவோம்!

என்னுயிர்த்தோழனே இந்தநாள் உனக்கு 
எப்போதும் போல வருடத்தில் வரும் இன்னொரு சிறப்புநாள் !

எதிலி இவனும் உன்னை 
எப்போதும் போல இன்னும் பல 
எல்லாச்செல்வங்களும் பெற்று 
என்றும் செழிப்புடன் 
எழில் கொஞ்சும் ஊரில் 
எழிமையுடன் வாழ எந்தன் இதயம் கனிந்த 
என் நல்வாழ்த்துக்கள்! 


எப்போதும் நம் நட்பில் நீ ஒரு எழுதுகோல்!
 எனக்கு இணையம் கடந்து 
என்னை இயக்கும் நீ ஒரு அச்சாணி! 
என்னோடு இணையத்தில் பயணிக்கும் 
எந்தன் தொடரில் எல்லாம் எதனை ,எப்படித்தொடருணும்
 என்பாயே எப்படி உன்னால் முடிகின்றது !


என்னையும் இணைந்தகைகள் போல 
எங்கிருந்தாலும் என் நண்பன் இவன்
 என்றும் கூறும் இனியவனே !
என் இதயத்தில் இருந்து எழுதும் வார்த்தைகள் வெறும் 
எழுத்துக்கள் அல்ல என்றும் யாசிக்கும் ஜீவன் !


என்றும் பலர் அறிந்த தனிமரத்துக்கும் 
எப்போதும் நீ ஒரு நட்பு ஜீவன் !
எங்கேயும் எப்போதும் யாரோ 
எவருக்கோ காத்து இருப்பார்கள் .
என்று உரைப்பாயே உன்னோடு இருந்து
 எத்தனை திரையரங்கில் 
எண்ணிக்கையில்லா திரைப்படம்;
எத்தனை ஊர்க் கதைகள் எல்லாம் ரசித்த  அந்த நாள் ஞாபகம் .
எப்போதும் நினைவில் உண்டு நண்பா!



என்றும் நீ என்னோடு நட்பில் எப்போதும் என்னுடன் வரவேண்டும் 
என்று இந்தநாளில்9/08/.. எல்லாம் வல்ல 
எங்கள்இறைவனிடம் வேண்டுகின்றேன்!


 எப்போதும் சுகமாக ,சுயமாக, என் நண்பன் என்றும் வாழ 
என் பிரார்த்தனைகள்! 
என்றும் அன்புடன் .
                              தி.சிவநேசன் ! 

8 comments :

Yoga.S. said...

எங்கள் வாழ்த்துக்களும்,உங்கள் வாழ்த்துக்களுடன்!

Unknown said...

வாழ்த்துக்கள்...

செங்கோவி said...

உங்கள் நண்பரை வாழ்த்துவதில் நாமும் இணைகிறோம்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நேசன் நலமோ?
உங்கள் நண்பனை மீயும் மனதார வாழ்த்துகிறேன்... இவர் வேற்று மொழிக்காரரோ?

தனிமரம் said...

எங்கள் வாழ்த்துக்களும்,உங்கள் வாழ்த்துக்களுடன்!//வணக்கம் யோகா ஐயா நலம் தானே? முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வாழ்த்துச் சொல்லியதுக்கு!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்0.

தனிமரம் said...

வாழ்த்துக்கள்...//நன்றி விக்கிமாம்ஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

உங்கள் நண்பரை வாழ்த்துவதில் நாமும் இணைகிறோம்.

9 August 2013 00:54 Delete//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நேசன் நலமோ?
நல்ல சுகம் அதிரா தாங்களும் அவ்வண்ணம் இருபீர்கள் என நம்புகின்றேன் விடுமுறை முடிந்துவிட்டது போல.
உங்கள் நண்பனை மீயும் மனதார வாழ்த்துகிறேன்..
//ந்ன்றி வாழ்த்துக்கு.
. இவர் வேற்று மொழிக்காரரோ?இல்லை நம்மொழியே கொஞ்சம் டூபாயில் இருந்தான் அதனால் இப்படி!ஹீ நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

9 August 2013 11:00 Delete