04 October 2017

காற்றில் வந்த கவிதைகள்-25




http://www.thanimaram.com/2017/09/24.html
-------------------------
உன்னை அழகாக்கும் அந்தியில் 
உதித்த மல்லிகைப்பூவை,
உயர்ந்த வாசணையுடன்,
உருக்கு கம்பி போல
உடைந்த என் இதயம்  வடிவில்
உலர்ந்த  கொண்டையில்!
உங்கள் கையால்
உதவி போல ஒருமுறை!
இறுக்கமாக சூட்டிவிடுங்கள் 
உற்ற நண்பனே என்று 
உரிமையுடன் நீ அழைக்கும் நேரத்தில்!
என்னை அணியாத 
உன் தலையில்  மல்லிகை வாசம் 
உன்னை எப்படி ஈர்த்தது?
உண்மையில் பொறாமை என்னும் பூ 
பூக்கின்றது  மல்லிகையில் !
உதிருமா பூப்போல பொறாமையும்?!!


உதயா பட சேலையில்  கூட நீயும் அழகுதான்
உள்ளே ஒரு பொறாமை இன்னும்.
உனக்காக சேமித்த 
உயர்ரகப்பட்டுப்புடவைகள் எல்லாம்
உருக்குழைந்துகிடைக்கின்றது
உருகும் காதலியின் வருகைக்காக!
உறவுகள் பொறாமையில் நம்மைப்பிரித்தாலும்
உள்ளன்புடன் எப்போதும் 
உதவாக்கரை ஒருவன்!

(யாவும் கற்பனை)


/////


---பேரானந்தம்!

இனங்களிடம் இனியில்லை
இனப்பிரிவு என்னும் 
இனவாதகோஷம்!
இணைந்தே இனியெல்லாம்
இங்கே  வசந்தம்  என்பது போல
இருக்கும் ஆட்சியாளர்கள்
இயம்பும் புதிய யாப்பும்,
இழந்தவர்களுக்கு இதயம் மகிழும்
இறைநீதியும் ,இருட்டறைகளுக்கு
இன்னல் போக்கும் ஒளியும் பிறந்தாள்!


இத்தேசத்தில் புத்தன்
இன்னும் வாழ்கின்றான் என்னும்
இதிகாசக்கதை போல
இந்த நெஞ்சிலும் பேரானந்தம் 
இன்னும் இதயம் எங்கும் நிறைந்து இருக்கும்!


3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

KILLERGEE Devakottai said...

மிகவும் இரசித்தேன் நண்பரே வார்த்தைகளை....

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

கற்பனை அத்தனையும் அழகு.. ஸ்நேகாவின் வேறு படங்கள் இல்லையோ நேசன்? நான் அனுப்பி வைக்கட்டோ?:)