05 October 2017

காற்றில் வந்த கவிதைகள்- 26


 http://www.thanimaram.com/2017/10/25.html
 --------------




நினைவிருக்கும் வரை!

நீண்ட வரிசையில்
நிறைமாத கர்ப்பனிகள்  போல 
,நீங்கள் முன்னே செல்க என்று
நீட்டிக்காட்டிய நீலக்கலர்
மண்ணெண்ணெய் லாந்தர் விளக்கின் ஒளியில் ,
நிறைந்த  மாரிக்கால பனிக்குளிரிலும்,
நீ வருவாய் என 
,நீ பார்காத பாட்டி சொலத்தைத் தட்டாதே,
நினைவுக்காட்சி  வெற்றிலை மடித்துக்கொடுத்த பாடல் 
போல,
நாட்டாமை குஸ்பூ ஆடிய
கொட்டைப்பாக்கு பாடல் போல
பிரம்புத்தடியில் சுற்றிய 
அழகுச்சிகரம் கந்தப்பொல 
வெற்றிலைத்தட்டு இறங்கும் ,
நான் ஓயா ரயில் நிலையத்தில்!
நீ தந்த அதிகாலை
நேசமான  கோப்பிக்கு ஈடாக
நிறையக்கதைகள் நெஞ்சில்!



,புதுச்செருப்பு கடிக்கும் 
நினைவுப்பாடல்கள் 
நினைத்தாலே இனிக்கும் போல 
நீயும் ,நானும் 
வெற்றிலைக்கூரும்  ,பேப்பரும் போல
நினைவிருக்கும் வரை எழுத வேண்டும்!
நாம் சேர்ந்தே பார்த்த படம்
நினைவிருக்கும் வரை படப்பாடல் போல
சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா என்று நாமும் வெற்றிலை போட்டே
நம் உதடுகள் பரிமாற்றிய முத்தங்கள் 
நினைவிருக்கும் வரை,


நீண்ட ரயிலில் பயணிப்போம்!
நிறம்மாறாத பூக்கள் படப்பாடலுடனும்!
நிறைவேறாத காதலுடன்
நினைவிருக்கும் வரை!

(யாவும் கற்பனை)
{நான் ஓயா-}
{கந்தப்பொல- }- மலையகத்தின் ஊர்கள்.
இலங்கையில் கந்தப்பொல வெற்றிலை தரம் உயர்ந்த சுவை,

வெற்றிலைக்கூர்-இரண்டு வெற்றிலையும், பச்சைப்பாக்கு அரைவாசியும், சிறு சுண்ணாம்பும் சேர்த்த ஒரு வடிவம்!

புதுச்செருப்பு கடிக்கும்- ஜெயகாந்தன் சினிமா படைப்பு!
----/-


----------------------

////
உயிருள்ளவரை!

உறவுகள் ஒரு தொடர்கதை போல
உன்னையும்  அன்பில் யாசிப்பில்!
உனக்காக என்னை நேசித்தவர்களையும்!
உதறிவிட்டு ,ஊர்விட்டு
உற்ற  உயர் நட்புக்களையும் பிரிந்து,
உயிருள்ளவரை உஷா  படம் போல ,
உனக்காக ஒரு ரோஜா படம் போல ,
உன்னைநினைத்து பட சினேஹா போல,



உள்ளத்தில் நீயே சகி என்றும் 
உதறாமாட்டாய்  உன்னத நேசிப்பில் என்று
உயிருள்ள வரை காதலுடன் !
உதவிக்கு வரலாமா படம் போல,
உருகும் காதலி ஆவாய் என்று!


உயரப்பறந்தேனே  ஆசையில் !என் பிரியமானவளே!!
உனக்கு என்ன உத்தியோகத்தகுதி உண்டு என்று?
ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளாமல் 
என்னைப் பிரிந்தாலும்!

உயிருள்ளவரை என்றும் நீயே
உள்ளத்தில் ஒரு உருவகத்தில்
உடரட்ட ரயில் போல 
உறங்காத நினைவுகள்!

(யாவும் கற்பனை)
உடரட்ட ரயில்- கொழும்பில் இருந்து மலையகம் நோக்கி பயணிக்கும் ரயிலின் பெயர்க்காரணி!






5 comments :

KILLERGEE Devakottai said...

பழமை நினைவோட்டங்களின் தொகுப்பு அருமை நண்பரே...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

பூ விழி said...

ஹாய் ப்ரோ எல்லா படபாடல்களுக்கும் பட்டம் போட்டு கட்டம் கட்டியாச்சு முதலில் வரும் மி மீ பாராட்டலா

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாக இருக்கிறது நேசன்! ஸ்னேகா உட்பட!!

வலிப்போக்கன் said...

அருமை...அருமை