09 May 2011

பிடித்த பாடகி--1

இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலகில் பிரிக்கமுடியாத பாகம் பாடல்கள் ! ஒவ்வொருபாடல்களும் பலதொழில் நுட்பக்க கலைஞர்கள் பங்களிப்புடன் காற்றில் தூதுவிடப் படுகிறது! .. 
     பாடல்கள் பாடி நடித்த காலம் போய் பின்னனி பாடுவதற்கு பலபாடகர்கள் திரையிசையில் குரலில்  அறிமுகமானார்கள். முகம் தெரியாவிட்டாலும் குரல் அவர்களை பல்லாயிரம் ரசிகர்களை  அவர்கள் பின் தொடரக்  காரணமானார்கள் .அந்த வழியில் என்னைக் கவர்ந்த பின்னனிப் பாடகர்/ பாடகிகளில்  என்றும் முதன்மையானவர்! ..
 
பாடகி ஜென்சி  ! 
இவரின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு இன்று மூன்று தசாகப்தமாக என் செவிகளுக்கும் மனதிற்கும் ஒரு தாயைப்போல் ,சகோதரியாக ,காதலியாக,வழித்துனையாக வருகின்ற இசைப்பிடிப்பூ. 
தமிழ் திரையில் குறிப்பிட்ட பாடல்களைப் பாடிய ஜென்ஸியின் கிறீச் குரல் வழியே  நம்ராஜாவின் இசையில் அவருடன் டூயட் பாடிய காதல் ஓவியம் பாடும் காவியப் பாடல் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்து கிரமர்போன் (எங்க ஊரில் ரொட்டியில் பாட்டுப் பாடும் கறுப்பு நாடா) எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் கீதம் இசைக்கும் எப்படி மனதில் நுழைந்தது என்று( காதலைப் போல்) இன்றுவரை தெரியவில்லை ! 
 .,             .....இடப்பெயர்வு வரமுன் நம் ஊர்களில் குழாய் புட்டில்(லக்ஸ்பீக்கர்) பாட்டுப்போடும் கலியான வீடுகளில் எல்லாம் அழையாத விருந்தாளி ஜென்சியின் பாடல் அடங்கிய டெப்(tape) .எப்போதும் தாலாட்டும் ராஜாவின் குரலுடன் அந்த அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடல் என்னுடன் பலமுறைகளில்( ரொட்டி,tape,cd,mp3, ipod)  இன்று ஐ-போன் ஊடாகவும் மீளா அடிமையாக வாழ்வில் ஒரு பாகமாக தொடர்கிறது .காலமாற்றம் தொழில் நுட்பங்களில் பாடல் பதிவு முறைமாருகின்றது மனம் மாறுதில்லை.
 .. 
காதல் ஓவியம் பாடலின் இடையில் "தாங்கு மோ என் தேகமே மன்மதனின் என்ற "வரியை ஒரு சுற்று ஹம்மிங்கில் ஆலாபனை   
செய்வதாகட்டும்  முடியும் வேளையில் ராஜாவின் பின்னே செல்லும்  லாலா லாலா ஹம்மிங்கில் ஒரு தேவதை கூடவருவது போன்ற உணர்வை எனக்கு எப்போதும் கேட்கும் போது  தரும் அந்தக்குரலில்  ஒரு ஈர்ப்பு !

..
இன்னொரு சிறப்பான பாடல் ராஜாவின் ராஜாங்கத்தில் உல்லாசப்பறவைகள் படத்தில் வரும்" ஏதோ தெய்வீக ராகம்  கேட்காத பாடல்"" என்ற பாடலில் ஒரு மயக்கமான குழைவை குரலினுடே தந்தாலும் படத்தில் இப்பாடல் காட்ச்சி சொதப்பல் என்பேன் .
என்பின்னிரவுப் பயணங்களில் தாலாட்டாகவும் மன புத்துணர்ச்சிக்கும் பாடலின்"  தந்தன் தந்தன் ஹம்மிங் சரியாக ஜென்ஸியிடம் கைபிடித்து போகையில் என் தேவதை வருவதைப் போன்ற பரவசம் ஏற்படுகிறது!

நிறம்மாறாத பூக்கள் படத்தில் இருபாடல்களும் இசையானியின் ஆத்மாவான பாடல் சிறப்பாக ஜென்ஸின் குரலினுடே என்னை கட்டிப்போட்ட பாடல்களில் 
"".. 
இனிய ஹம்மிங் உடன் ஆயிரம் மலர்களே மலர்களே! இப்பாடலின் வைரமுத்துவின் வரியை ரசித்து அதன் பாவத்தை குரலில் தருவதில் எனக்கு  எப்போதுமே இவர்குரலில்  தனியின்பம்" 
மற்றப்பாடல்"  இருபறவைகள் மலை முழுவதும் "பாடலில் மலையடிவாரத்தில்  காட்சிகள் படம்பிடிக்கப் பட்டிருக்கும் பாடலின் பின்னே அவரின் குரலில் மலையலகை ரசிக்க முடியும்!
..
இன்னும் ஜானியில் ஒரு சிறியபறவை,கீதா சங்கீதா என்று ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து பாடிய அன்பே சங்கீதா படப்பாடல், பூந்தளிர் படத்தில் ஜேசுதாஸ் உடன் பாடிய மீண்பிடித்தேரில் மன்மத ராஜன் ,பாடல்களும் என் இரவுப் பொழுதுகளை தாலாட்டும் ஜென்ஸி சில பாடல்களை பாடினாலும் முத்திரை பதிதவர். கேரளாவில் 
குடித்தனம் நடத்தும் இந்தக்குயில் மீண்டும் பாட சந்தர்பம் கிடைத்தாள் தமிழ் திரைக்கு  குரலில் இசை மீட்ட தயார் என அன்மையில் ஒரு வார சஞ்சிகையில் கூறியிருந்தார்...
..
மொழியை சிதைக்கும் பாடகர்களும், குத்துப்பாட்டில் கும்மியடிக்கும் இன்றைய சூழலில் குரலில் அமைதியான இசையை மதிப்பவர்கள். பின்னனிபாடுவது வியாபாரம் என என்னும் நிலையில் மீண்டும் ஒருவலம் வரத்துடிக்கும் இந்தக் கீதம் சிந்துபாட முடியுமா?

2 comments :

ஹேமா said...

ஜென்சியின் குரல் ஒரு வித்தியாசமான செல்லமான ஒரு குரல்.எனக்கும் மிகவும் பிடிக்கும்.ரசனையோடு இருக்கிறது பதிவு !

தனிமரம் said...

நன்றி தோழி உங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!