11 May 2011

அண்ணை பூமி.

 ஓ எங்கள் தாய் நிலமே!
நிலம் ஆழப்போய் நிலத்தில் ஆகுதியானது எங்கள் சுதந்திர தீபம் .! புல்லுமுளைக்கும் நிலத்திற்கு உரமாகிப் போன எங்கள் உறவுகளின் உடல்கள் கணக்கிட்டால் கதிகலங்கிப் போவான் கப்பல் ஓட்டிய தமிழன்!
..
சகுனிகளும் ,சாத்தான்களும் வெள்ளரசுப் பேய்க்கு மகுடி ஊத எங்கள் நிலத்தில் பேய்கள் ஆடிய களியாட்டத்திற்கு நிலமே நீதான் கண்கண்ட சாட்சி!

.எத்தனை துளைகள் நிலத்தை வெறி கொண்டு தோண்டி நவீன ஆயுதங்களை பரீட்ச்சித்து நம் சந்த்ததியை சாய்த்துவிட்டது!
..
நிலம் இல்லை என்றாகிவிட்டு ஆண்டு இரண்டு ஓடிவிட்டது!
இன்னும் பேய்களின் வார்த்தை யாலங்களுக்கு பெரிய வல்லரசுக்களும் போதனை தூதர்களும் வியாக்கியானம் கூறுகிறார்கள் உங்கள் பிரச்சனை முடிந்துவிட்டது .உங்களுக்கு எல்லாம் சுபமே !என்று புலம் பெயர் தேசத்தில் பல புல்லுருவிகள் புற்றீசல் போல்! ஒத்து ஊதுகிறார்கள்!.
..
வீழ்ந்தவர் போய் ,விழுப்புன்னுடன் விலங்கிடப் பட்டவர்கள் ,, வேலிக்குள் அடைக்கப் பட்டவர்களும் ,இன்னும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல்
சிறையிலும் சீரலிழ்ந்தும் ,
சீரலித்தும் படு அவலத்தை என் நிலமே நீ உள்வாங்கியும் உறைந்து போய்க்கிடக்கிறாய் புலப்படாத, தெளிவில் சாதார மானிடரைப்போல்!
..
அயலவரின் பெரியண்ணன்  தோரனைக்கு நம்நிலம் பலியாக்கப்பட்ட வரலாறு என்றும்
பதியப்படும் நம்சந்ததிகள் வரலாற்று ஏடுகளில்!
தாய்நிலமே நீ எழுதுவாய் ஒரு சரித்திரம் கரிகாலனிடம் எந்த ஆசைக்கும்  பேரங்களுக்கும்  கொள்கை பலியாகவில்லை! தோறுப்போனது கொள்கையுள்ள தலைவன் அல்ல!என்றுமட்டும் பெருமிதத்துடன் சிலையில் எழுது!
.

2 comments :

ஹேமா said...

ஒரு வார யுத்தக் குற்ற நாள் அனுசரிப்போம்.இன்னும் மனதில், உறுதி கொள்வோம்.எம் தலைமுறை தவறினாலும் நிச்சயம் தாயகத் தாகம் தணிப்போம் !

தனிமரம் said...

நன்றி உங்களின் வருகைக்கு !
உண்மையில் நாம் புலம் பெயர்ந்தாலும் அடுத்ததலைமுறை சரி துயரங்கள்தாண்டி சுதந்திரமாக வாழ குரல் கொடுப்போம் !