27 May 2011

விளம்பரத்தில் உள்குத்து!!

விளம்பரம் ஒட்டுவது ஒரு பகுதி குறும்பு !
அதில் மறக்க முடியாதது நான் வேலை செய்த   2003 இல் . யாழ் பகுதியில் போட்டி நிறுவனங்கள் அதிகம்  சந்தைப்படுத்தல் வேலையில் எனக்கு அதிக நண்பர்களும் சில விரோதிகளும் எப்போதும் கூட இருப்பார்கள் .இப்படியானவர் செய்யும் கூத்து உள்குத்துவை விட அதிகமான ஜாலி நிறைந்தது.
 நானும் என்னுடன் முன்னர் வவுனியாவில் வேலை செய்த பல நண்பர்களையும் பல்தேசியக் கம்பனிகள் யாழிற்கு இடம் மாற்றி எங்கள்  சுதந்திரங்களை பறித்து நல்ல பிள்ளைகளாக ஊர்ச்சனங்கள் பார்வையில் பந்தாட விட்டது. !

எங்காவது தலைக்கறுப்புக் கண்டால் ஒன்றை பத்தாக்கும் பக்கத்து வீட்டு பெருசுகள் காவல் என்ற பெயரில் எத்தனை   கொடுமைகள் !நிம்மதியாக புதுப்பட விளம்பரம் எல்லாம் பார்க்க முடியாது ஆவலம்!

இப்படித்தான் ஒரு பொழுது என் போட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் அதிக இடங்களில் விளம்பரம் ஒட்டியிருந்தார் !கொஞ்சம் ஒரு பகுதியில் எனக்கும் இடம் கேட்டேன் .
அவர் இல்லை என்பதுடன் அதிகமாக பேசினார் நீங்கள் மழைக்கு முழைத்த  காலாங்கள் இவ்வளவு நாளும் (சாமாதானத்திற்கு முன்) நான் பாதுகாத்த இடம் என்றார்.அவை அரசின் தவறு எனதல்ல!

இவருக்கு மேலதிகாரியாக இருக்கும் சகோதர மொழி நண்பர் எனக்கு நண்பர் ! 
நாங்கள் ஒன்றாக ஒரே நிறுவாகத்தில் வேலை செய்தவர்கள் அவருக்கு அதிக பின்புல உதவிகள் இருந்தது இதனால் வேறு நிறுவனத்திற்கு உயர் பதவிக்குப் போனார் . ஆனாலும் நானும் அவனும் ஒன்றாக தொடர்பில் இருந்தோம் .இருக்கிறோம்!
  
இக்காலகட்டத்தில் அதிகமான வெளிமாவட்ட நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் என்னுடன் .தென் இலங்கையில் இருந்து இப்பகுதிக்கு வரும் சந்தைப்படுத்தல் ஊழியர்கள், மேலதிகாரிகள் எங்கள் குழுவை கானாமல் போகமாட்டினம் .அந்தளவுக்கு புகழ் பெற்றவர்கள் இல்லை நாங்கள் !ஆனாலும் விற்பனை விசயங்களில் பலதகவல் பெறுவதற்கும் எங்களின் மேலதிகாரிகள் அவர்களுக்கு தெரிந்தவர்களாக ,,உறவுக்காரர்களாகவும் இருப்பார்கள்!இதனால் எங்களிடம் போனால் உதவி கிடைக்கும் என கூறிவிடுவார்கள் சிலசமயங்களில் கைபேசியில்  இனைத்தும் விடுவார்கள்!

அவர்கள் வந்தாள் முகமாலை தாண்டி நேராக நாங்கள் வேலைமுடித்து வரும் எங்கள்பகுதிமுகவர் இடத்தில் காத்திருப்பார்கள்!

பிறகு என்ன யாழ் எங்களின் கையில் என்பது வடிவேல் போல் பிரச்சாரப் பீரங்கிதான் தங்குவதற்கு விடுதி தயார் செய்வது தாக சாந்திக்கு மிலேனியம் சிற்றிக்கு( கலட்டிப் பகுதிக்குப் டாஸ்மார்க்)போவது ,ஆரிய குளம் புத்த கோயில் என மாலை நேரம் இவர்களுடன் கழியும் .நல்ல நண்பராக வருபவர்கள் மெண்டிஸ்,அதிவீசேஸம், உள்ளே போனால் இவர்களின் நிறுவாகக் கூத்து வெளியில் வந்திடும் வாந்தியுடன் அதன் பிறகு எங்களிடம் இவர்கள் கருனாநிதி போல் துண்டை போட்டுக்கனும்.

உண்மையில் எனக்கு அதிகமான வெளிமாவட்ட நண்பர்களை வவுனியாவில் பணியில் இருந்தபோதுதான் சிநேகம் பிடித்தேன் .இத்தொழிலில் நல்ல நட்பு இருந்தால் வியாபார வெற்றிக்கும் பதவியை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும் உத்தி புரிந்தவன்!

அந்த நண்பருக்கு சரியான ஆப்பு வைக்கனும் என்று காத்திருந்தேன் !அப்போது மற்ற நண்பர் கூறினார் அவரின் மேலதிகாரி 2நாட்களில் வருவதாக! நானோ என்னுடைய உயர் அதிகாரிகள் வந்திருந்தனர் எரியும் அடுப்பில் எண்ணை ஊற்றுவதுபோல்! 

அவனின் விளம்பரங்கள் அதிக இடங்களில் அழகாய் இருக்கிறது நீ விற்பனையை மட்டும் பார்க்காத இவற்றையும் கவனம் எடுக்கனும் என்றார் என் அதிகாரி .அவருடன் வந்த இஸ்லாமிய நண்பர் தன் மேதாவித்தனத்தை என்னிடம் காட்டினார் .நீ என் பகுதிக்கு வா இரண்டு நாள் எப்படி விளம்பரத்தை கையாளுவது என சொல்லித்தருகிறேன் என்று!

இருவருக்கும் அட்டமத்தில் சனி .எனக்கு இது பெரிய விடயம் இல்லை ஆனால் இங்கே மினக்கடும் நேரத்தில் சந்திரன் மினியில் நல்ல படம் பார்க்கலாம்!

மறுநாள் வழமையாக வேலை செய்துவிட்டு இரவு விளம்பரம் ஒட்டுவது எனத் தீர்மானித்தேன் .இரவுச்சாப்பாட்டை நேரத்துடன் முடித்துக் கொண்டு என் உதவியாளருடன் கிளம்பினேன் நகர்வலம் .

மதியம் என் மற்றைய நிறுவன விளம்பரங்களை அவர்களின் உதவியாளரிடம் என் மற்றைய உதவியாளரைக் கொண்டு வாங்கி என் வாகனத்தில் வைத்துக் கொண்டேன்!
.

போட்டி நிறுவனங்களின் விளம்பர பாதாதைகள் ஆமியின் ஆக்கிரமிப்பாள் அழிந்த மதில்கள் மீது சிரித்துக் கொண்டிருந்தது!
எனது போட்டி நிறுவனம் சவற்காரங்களும்,
சலவைத்துணித் தூள்களுமே!
எப்போதும் இன்னொருவரை சின்டு முடியனும், நண்பர்களை சண்டைக் கோழியாக்கனும் என்றாள் நாங்கள் இதில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!

அது சின்ன அரசியல் போட்டி !நிறுவன விளம்பரங்களை கிழித்துவிடனும் ,,தயாரிப்பில் புரளியைக் கிளப் பினால் ஒரு கிழமை, வியாபாரம் மந்தமாகும் மேலதிகாரி சின்னப் புள்ளையிங்களை செந்தமிழில் கொஞ்சுவார் இவனுங்க முகத்தை காதலி கப்பல் ஏறிப்போனது போல் வைத்துக் கொண்டு மிலேனியம் சிற்றியை (டாஸ்மார்) தமிழக காங்கிரஸ் காரியாலயம் போல் கதிரையை என்ன சுழற்று சுற்றுவார்கள்.


அன்று இரவு எனது விளம்பரங்களை ஒட்டிவிட்டு என் பாசக்காரனின் விளம்பரத்திற்கு மேல் பிரபல்யமான பால்மா விளம்பரத்தை பல இடங்களில்  குறுக்கே ஒட்டிவிட்டேன்!

  இப்படிச் செய்தால்
உருண்டு புரல்வது அவர்கள் தான் !மறுநாள் வியாபாரத்தை மறுந்து வேட்டியை கிழிக தயாராவார்கள்!
அடுத்த நாள் இவரின் மேலதிகாரி முகமாலை சோதனை தாண்டி உள்ளே வர நான் வன்னிக்குள் போய்க் கொண்டிருந்தேன்!

மறுநாள்  வன்னி தாண்டி வேலைக்குப் போய் கொண்டிருந்தேன் முகமாலை ஊடாக  கொடிகாமத்தில் பால்மாவின் விளம்பரம்  சந்திகளில் பாட்டிமாரின் கந்தல் ஆடை போல் கிழிந்த்துக் கொண்டிருந்தான் என் போட்டி நிறுவன பாசக்காரப்புள்ள என் காரில் ஒலிக்கிறது "அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு"" ரிதம் படப்பாடல்!

9 comments :

ஹேமா said...

நேசன்...நிறைய அனுபவங்கள் இருக்குப்போல.மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் வருது.இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கோ !

தனிமரம் said...

செய்த வேலைகளில் சிலசுவாரசியங்களை இந்த தனிமரம் அசைபோடுது நன்றி உங்களின் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் தோழி!

நிரூபன் said...

ஆஹா... சைட் கப்பில் சிக்ஸர் அடிச்சு இருக்கீங்களே. அருமை பாஸ்...
நினைவுகளை அழகான மொழி நடையில் தொகுத்திருக்கிறீங்க. ஊர் வாசம், மண் வாசனை எல்லாவற்றையும் இன்னமும் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்பதற்கு உங்கள் எழுத்தே சாட்சி,

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இப்படியான சின்னச்சின்ன குறும்புகள் ஞாபகங்கள் தான் புலம்பெயர் தேசத்து இறுக்கமான வாழ்க்கையிலும் என்னை சந்தோசமாக வைத்திருக்கிறது!

Unknown said...

ஊர் வாசம் பிச்சுக்குது பாஸ்...

Unknown said...

நெசமாலுமே பத்திகிச்சு பத்திகிச்சு ஹிஹி

Unknown said...

ஏன் பாஸ் நாம எல்லாம் உங்கள் இணையத்தில் உறவுகள் இல்லையா??#டவுட்டு

தனிமரம் said...

நன்றி நன்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

தாய் தந்தையைப் போல் பிறந்த ஊரையும் மனதில் சுமப்பது புலம்பெயர்வாழ்வில் ஒரு அங்கம் அவை தந்த கனவுகள், கற்பனைகள் தான் என்னை வழிநடத்துகிறது இதுதான் யதார்த்தம்! இது பிரதேசவாதம் இல்லை புரிதல் அவ்வளவுதான்!