14 March 2012

வாருங்கள் டாஸ்மார்க் பக்கம்

எப்போது சென்னை போனாலும் நண்பர்கள் சேர்ந்தால் வடபழனியும் ; போரூர்  என எங்கள்  வசமாகிவிடும்.அந்தளவுக்கு  என் பல  நண்பர்கள் அங்கு இன்னும் இருக்கின்றார்கள்.

 அவர்கள்  என்னோடு தாயகத்தில்  வேலை செய்தவர்கள். கால மாற்றம்  சில தவிர்க்க முடியாத  காரணங்களால் குடும்பத்துடன் சென்னையில்  வாழ்கின்றார்கள் . அவர்களுக்கு  நான்  பாரிசில் இருந்து  வெளிக்கிட்டு விட்டன் என்று சொன்னால்  .மீனம்பாக்கம் விமான நிலையத்தில்  எப்படா  இந்தக்கோச்சி    எப்ப  வரும் என்று  ஆவலுடன் இருப்பார்கள் ...

 ஆனால்  அவர்கள் வீட்டுக்காரிகள்       இங்கையும்  வந்து தனிமரம்  அண்ணா எங்க செல்லங்களை ஒரு வழி பண்ணுகின்றது .


 நாங்க  இப்பவே  எங்க மச்சாளுக்கு  போன் போடுறம் என்று காதைக்கடித்தலும் பாசமிகு  தங்கைகள்.

. இந்த நண்பர்கள் கும்மாளம்  போட்டுஅவங்க தாக சாந்திக்கு  என் பேர்  கெடும்  என்ன செய்வது.


  வருடத்தில்  ஒருமுறை  தானே  அவங்களுடன் சேர்கின்றேன்.

  அதனால்  தங்கைகள்  என்ன திட்டினாலும் ஒ   அப்படியா  என்று   நல்லபிள்ளையாக  இருந்து விடுவேன்  .


அவர்களுடன் சேர்ந்து  போவது வைன் சொப் பக்கம் .

 என்ன பிரென்ச் வைன்  கொண்டுபோய் கொடுத்தாலும் .

     வா    மச்சான்      ஒரு ரவுண்டு போய்  வருவம்  என்றால்  அன்று இரவு  கஞ்சிதான் .. வீட்டுக்காரி எனக்கு  தொலைபேசியில் என்ன இன்று சென்னையில்  ஆறு ஓடுது  போல  என்று ஒப்பாரிதான் வைப்பாள்..


  இந்த மச்சான் நல்லவன்  என்று நம்பி கழுத்தைக்கொடுத்தேன்  அண்ணா.

 இவர் சரியான மோஷம் என்பாள் ஒரு  தங்கை.

 இருந்திட்டுத்தானே  என்று  சமாலிக்கிறதுக்கு நான் படும்பாடு  ஏண்டா சென்னை வந்தோம்  என்றாகிவிடும் ..

அப்படி அவர்களுடன் போனால்  நல்ல பல கதைகள் கிடைக்கும்  டாஸ்மார்க்கில் .

  தொலைந்த  காதல் சிட்டுக்கள்  கதை., வேலையில்  வரும்  பிரச்சனைகள், நண்பர்கள் துரோகம் , அரசியல் வங்குரோத்து, அடுத்த முதல்வர் , அடுத்த சூப்பர் - ஸ்டார் ,; விலைவாசி  ஏற்றம்,  அடுத்த பயணம் போக இருக்கும் வெளிநாடு  , 

 இது மட்டுமா ,,,துபாயில்  இருந்த அனுபவம் என இன்னும் நீளும்  பேச்சுக்கள் . .


என்னதான் இங்கு போனாலும் எனக்கு வரும் கோபம்.

 இந்த டாஸ்மார்க்கில் துப்பரவு இல்லை.

  ஒரே  ஈக்கள் . சரியான கழிப்பிட வசதி  இல்லை.  எங்கும் வீசி இருக்கும் போத்தல்கள் .     இருந்து மெதுவாக   மனம் விட்டுப் பேசும்  நிலை இல்லை.!

 ஏன் இப்படி  அரசு.

 எவ்வளவு  உழைக்கின்றது  இந்த மதுபான சாலைமூலம்.

  ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு இல்லை .

வரி  அதிகம் கொடுத்து  
 பீர் , கிங்பிஷர் ; நெப்போலியன் ;பிராண்டி வாங்கும் குடிமகனுக்கு  ஒரு பாதுகாப்பு இல்லையா!அவர்களின்  உழைப்பில்  அதிகம் வருமானம் ஈட்டும் இந்தக்கடைகள் .

போதிய  சுகாதாரத்தை  பேணுவது இல்லை.

  இதே  வெளிநாடுகளில்  எப்படி மதுபானசலைகள்  இருக்கின்றது.  என்று இந்த கடைகளை ஏலம் எடுப்போருக்கு  போதிய அறிவுறுத்தல், வழிநடத்தல்கள்  கொடுக்க  அரசு  ஏன்  முன்வாறது இல்லை.

 குடியை  கெடுக்கும் குடி  என்போர்  குடிக்கக் கொடுத்துதானே  கொள்ளை  லாபம்  பார்கின்றார்கள் .பாருங்கள்  சில படங்கள்  உங்களுக்காக . 

 

23 comments :

ஹேமா said...

எனக்குக் கோப்பியை மட்டும் தாங்கோ.பால் விடாம சீனியும் போடவேண்டாம்.தண்ணியடிக்கிறதைப் பற்றி நாளைக்குக் கதைக்கிறன்.நானும் ஒரு கிளாசோட வாறன் தம்பிகளா !

Yoga.S. said...

ஆள் தண்ணியடிக்கிற கதை எண்ட உடனையே வந்திட்டுப் போட்டா போல?இங்கிலாந்தில இருக்கிற ஆக்கள் தான் சீனி வருத்தக்காறர் எண்டா,சுவிசிலையும்??????ஹி!ஹி!ஹி!!!!!!(போன மாதம் இரத்தம் சோதிச்சது.இந்தக் கிழமை சலம் சோதிச்சது."ஒண்டும்"இல்லை எண்டிட்டாங்கள்.பாவக்காயின்ர மகிமை!)

Yoga.S. said...

வேலையால கலைச்சு வந்து பதிவு போட்டிருக்கிறியள்.விடிய மிச்சம் கதைப்பம்.பொன் நுயி!!!!!!!!!!!!!!

அம்பலத்தார் said...

//வாருங்கள் டாஸ்மார்க் பக்கம்//
இன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருந்ததில் இப்பொழுதுதான் உங்கள் அழைப்பு காதில் விழுந்தது நேசன்.

அம்பலத்தார் said...

ஐயையோ வழமையாக மெதுவாக வாற ஹேமா கள்ளுக்கடைப்பக்கம் போகலாம் வங்க என்றதும் முத ஆளா வந்திட்டா

அம்பலத்தார் said...

நேசன் என்ன என்ரை தங்கச்சி எங்கேயோ வெளியே போயிருக்கிறாவோ? அந்த துணிவிலதான் இந்தமாதிரி பதிவு எழுதியிருக்கிறியள் என நினைக்கிறன்.

Unknown said...

ஏதோ எல்லாரும் உடம்புக்கு கேடு விளைவிக்காமல் ததண்ணி போட்டிங்களென்றால் நல்லா இருக்கும்....

தனிமரம் said...

வாங்க ஹேமா அக்காள் !
பால்கோப்பிதான் தருவேன் சீனியும்,பாலும் வேண்டாம் என்றால் வெறுங்கோப்பி குடிக்க முடியுமோ என்னால் முடியாது ஒரு நாளைக்கு  8 கோப்பி குடிக்க பாலுடன் சீனி வேண்டும் அளவாக.
வெளிநாட்டு மேசை நடைமுறையை அக்காச்சி கைபிடிக்கின்றீங்க குடிக்காட்டியும் ஒரு கொக்காக்கோலா அதில் ஊற்றி கிளாஸ் நிறைத்துக்கொண்டு நேரம் போக்குவதற்கு. ஹீ ஹ
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

யோகா ஐயா இதன் மூலம் செல்லவருவது தண்ணியடிக்காமல் பாவற்காய் சாப்பிடுங்கோ ஆரோக்கியமாக இருக்கலாம் என்று.ஹீ ஹீ

தனிமரம் said...

யோகா ஐயா இது எல்லாம் நல்லாக் கவனிக்கின்றார் போல . இப்ப கொஞ்சம் வேலை நேரம் மாற்றம் அதனால் பதிவு கொஞ்சம் அவசரம் இல்லை . ஹீ ஹீ பொன்நுயி போய் பொன்யூர் வந்துவிட்டது .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாங்க அம்பலத்தார் அழைப்புக்கேட்டிச்சா அப்ப ஒரு கூட்டாளி சேர்ந்தாச்சு !ஹீ ஹீ

தனிமரம் said...

ஹேமாக்கா கள்ளுக்கடைக்குப் போகவேண்டாம் என்று எதிர்ப்புக்காட்டத்தான் முதல் ஆளாக வந்திட்டா .);;

தனிமரம் said...

அம்பலத்தாருக்கு என்  வீட்டுக்காரியின் குணம் நல்லாத் தெரிஞ்சிருக்கு ஹீ ஹீ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நன்றி எஸ்தர் -சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Anonymous said...

Cheers Nesan...

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் என்னுடன் கைகோர்த்தற்கும் ஹீ ஹீ

ஹேமா said...

எல்லாருக்கும் அறியத் தருவதாவது.......

நாங்கல்லாம் சிவப்பு வைன் இல்லாட்டி பிரண்டி அதுவும் மார்ட்டின் பிரண்டி மட்டும்தான் குடிப்பம்.உந்தக் கள்ளை மனுசன் குடிப்பானே.அதுக்காக வரேல்ல.நான் வரேக்க பதிவு போட்டிருக்கார் நேசன்.சாப்பிட்டுவிட்டு வந்தபடியால்தான் வெறும் கோப்பி கேட்டனான்.சீனிப்பிரச்சனை இன்னும் வரேல்ல !

அம்பலம் ஐயா தங்கச்சியைத் தேடுறார்.அப்ப நான் ஆராம் !

Yoga.S. said...

அய்யய்யோ!ஹேமா பொயிங்கி(அதிரா பாஷை)எழுந்திட்டா!இந்த விளையாட்டுக்கு நான் வரயில்லை,எஸ்கேப்!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

மார்ட்டின் பிராண்டி சிவப்பு வைன் எல்லாம் மிகவும் உடம்புக்கு நல்லம் ஆனால் அளவோடு எடுக்கனும் பிரென்சுப் பாட்டி சொலித்தந்தது ஹேமா ! ஹீ

தனிமரம் said...

ஐயோ யோகா ஐயா கள்ளுக்கடைப் பக்கம் போறார் அரியாலைப் ,பக்கம் காணி இருக்கு இல்ல ஹீ விடமாட்டன் தனிமரமா கொக்கா!

தனிமரம் said...

நான் ஆராம் // ஹீ கொஞ்ஜ்ம் இருங்கோ ஹேமா பதில் வரும் கிட்டடத்தட்ட 27 அங்கத்தில்.
ஹீ ஹீ

Yoga.S. said...

வேணாம் தம்பி!அரியாலையில "எல்லாம்"கிடைக்கும் தான்.பெட்டை பொயிங்கி எழுந்திட்டுது!இதுக்குமேலயும் இஞ்சை நிண்டால்............................!மனிசி மூண்டு புள்ளை பெத்தும் உதொண்டும் பாவிக்கேல்ல.இப்ப எனக்குக் கொஞ்சம் தலையிடியா இருக்கு.கும்மியடிக்க முடியேல்ல,மன்னியுங்கோ.

தனிமரம் said...

ஆஹா யோகா ஐயா என்னை வம்பில் மாட்டிவிட்டு கிரேட் எஸ்கேப்!எதற்கும் பண்டோல் போட்டுவிட்டுப் படுங்கோ நாளை சந்திப்பம்.இனிய உறக்கம் தலையிடியை தள்ளி வைக்கட்டும்  தனிமரம் தொடர்ந்து வரும் தங்களோடு!