24 March 2012

கண்ணீர்த்துளிகள்!

செய்திகள் வாசிப்பது என்று எங்கள் இதயங்களில் வாசித்தீர்கள்!


பொங்கும் பூம்புனல் என்று புதிய தகவல்கலோடு புதுப்பாடல்களுக்கு இடையில் இரடிக்கவிதை தந்து இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் புதுமை செய்தீர்கள் .
புதியவர்கள் எல்லோருக்கும் புதுமை செய்துகாட்டீனீர்கள்  .நிகழ்ச்சிகள் தயாரிப்பது ,குரல் தருவது ,விளம்பரத்தில் புதுமை என்று காற்றாக  வானொலியில் வந்தீர்கள் அம்மா!

என் விருப்பம் என்று சொல்லி கண்டசாலா முதல் இன்றைய விஜய் வரை கானம் தந்தீர்கள். காற்றில் கரைந்து போனதாம் உங்கள் உயிர்காற்று!!!

வலையில் வந்த செய்தியில் வாடிப்போனேன் உங்கள் நினைவுகள் பின்னே!



முகத்தார் வீடு,ஒலிமஞ்சரி,என ஒலித்த ஓரங்க வானொலிக்குயில்  ராஜேஸ்வரிசண்முகம் என்ற ஆலமரம் சாய்ந்து விட்டதாம் .
 சாய்ந்து கொண்ட
இரவின் மடியில்  உறங்காத கண்களுக்கும் உறக்கம் வர மறுக்கும் இதயங்களுக்கும் இனிவரும் பாடல் கேட்டது இலங்கையில் மட்டுமா? இந்தியாவிலும் தான்!

இனி எப்போது கேட்பேன் சந்தனமேடையில் உங்கள் குரல்??
 உங்கள் பாடல்கள்!
,ஒலிமஞ்சரி ஒலிக்க நீங்கள் வரும் சனிக்கிழமையின் மதியம் 2'மணி மறக்காமல் . வீட்டுவேலை செய்யாமல் வானொலி அருகே மனதைத் தொட்ட பல்சுவை அம்சத்தோடு நீங்கள் வர  செவிகளைக் கூர்மையாக்கி கொடுத்துவிட்ட கடனாளி அல்லவா!
அந்த குறியிசையை நானும்  இன்று வரை தேடுகின்றேன் .


உங்களை நேரில் கண்ட போது அந்த இசைமறந்தேன் !
உங்கள் முகம் பார்த்து அன்று.

இன்று முகம் பார்க்க முடியாமல் மூச்சுக்காற்றில் போனதா?
மயக்கமா,கலக்கமா என நினைவுகள் உங்களுடன் .வானொலிக்குறுக் எழுத்துப்போட்டி,கதம்பமாலை,நேயர் விருப்பம் இன்றையநேயர்,என் விருப்பம்,வெள்ளிக்கிழமை ஹலோ அல்லியின் அழையுங்கள் என்ற இலக்கம் இன்னும் இதயத்தில் உங்களைப்போல அழியாமல் இருக்கு.
 அது தந்த நீங்கள் இங்கில்லை .
.நாடகங்களில் குரல் வரும் விதம் கேட்டு விழித்திருந்தேன்  .வானொலி மஞ்சரியில் நூல் உருவில் இருந்தது பல பங்களிப்பு
உங்கள் கைவண்ணம்.
மகளிர் உலகம் சொற்சிலம்பம்,கண்டுபிடியுங்கள் குறியிசையில் பாடல் எது என்று . ,மறக்கமுடியுமா !கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு!

பிறந்தநாள் வாழ்த்து என பிரியமாக ஒலித்த குரல் பிரிந்து விட்டதாம் .

ராஜேஸ்வரியின் உடலில் இருந்து .

பிரிவுத் துயரில்  பெற்ற பிள்ளைகள் மட்டுமா ?பாடல் கேட்ட வானொலி நேயர்களும் தான்!.

பாசத்தோடு பல இசைகளில் மொழிகடந்து வந்த மூத்த அறிவிப்பாளர் .

பலருக்கு பின் நாட்களில் பயிற்ச்சி கொடுத்த பல்கலைக்கழகம் மூடிவிட்டதா இமையை.

 .இனி எங்களின் அம்மா என்று யாரைக்காட்டுவோம் இசையில் வளர்ந்த செவிகளுக்கு.?

இசையும் கதையும் என்னுயும் எழுதத்தூண்டியது. இடைவிடாது தபால் அட்டை அனுப்பி பாடல்கேட்கும் நேயர் விருப்பத்திற்கு.
 இடையில் தொலைபேசியில் பாடல் கேட்கும் காலத்திலும் தபால் அட்டை சுமந்து வந்த பெயர்களில் என் பெயரும் சொன்னபோது கிள்ளிப்பார்த்தேன் நிஜம் தானா .என்று நேரில் பார்த்ததும் நினைவில் நின்றதும் குரல் மட்டும்தான்.

 இந்த நிமிடம் வரை எப்போதும் புன்னகை உங்கள் வரவில் .அதுதான் பொன்நகை என்று சொன்னீர்கள் !
தொலைபேசிப்பாடல் கேட்கும் நேயராக வானொலிக்கு அஞ்சல் அட்டைப்போய் அலைபேசியில் அடுக்கடுக்காக காத்திருந்தேன். உங்களுடன் சிலநிமிட உரையாடலுக்கு .
வணக்கம் நீங்கள் யார் பேசுவது ?
அடுத்த நாள் என் பாடசாலையில் பலர் கேட்டார்கள் நீதானே நேற்று ராஜேஸ்வரியுடன் பேசியது?

 சிலித்துப்போனேன் பேசிய பின்
அன்று பள்ளிக்கூடம் முழுதும் என் பெயர் இன்று வானொலி எங்கும் உங்களுக்கு கண்ணீர்த்துளிகள்!.
இன்று சுமந்து செல்லும் உடல்பேழையைப்பார்க்க வில்லையே துடிக்கின்றது இதயம்.

உங்களிடம் பிடித்ததே மருதுகாசி முதல் மறைந்த வாசன் வரை பாடல் எழுதியவர்கள் பெயரைத்தான் முதலில் அறிவிப்பு செய்வீர்கள் .

முகவரி கொடுத்த கவிஞர்கள் எல்லாம் உங்களுக்கு ரசிகர்கள் .
வைரமுத்து ,பழனிபாரதி ,யுகபாரதி என பாக்கள் புனைந்தது உங்கள் தனிப்பாணிக்காக தங்கள் விருப்பம் நீங்கள் என்று.
 இனி
வரும் பல இரங்கற்பாக்கள் எங்கள் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் மறைந்தாலும் மனதில் வாழும் அறிவிப்பாளினி என்று!

காலக்கூற்றுவன் கவர்ந்து சென்றாலும் எங்கள் நினைவில் நீங்காத தேவதை ராஜேஸ்வரி சண்முகம் எங்கள் வானொலிக்குயில் .

இலங்கையின் ஒலிப்பரப்புக்கு விட்டுச் சென்றது பல ஒலிப்பேழைகளையும் இறுவட்டுக்களையும் கடமையில் இருந்த போது. அதன் வழியே உங்கள் குரல் காற்றில் கலந்து வரும் உங்கள் உடல் தான் கவர்ந்து சென்றான் குரலை அல்ல !

அடுத்த நிகழ்ச்சிக்கு அன்பு நண்பரிடம் ஒலிவாங்கியை கையளிக்கும் போது!
 இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும் என்று விடை பெறுவீர்கள் விடைபெற்றது அறிவிப்பில் இருந்து மட்டுமா?(23/3)   ?அன்புத்தாயே என்று கதறும் பிள்ளைகளிடம் இருந்தும் தான்.

அந்த ஒலிவாங்கியை வாங்க நினைத்த ஒர் இதயம் இன்று கண்ணீப்பூக்கள் சிந்துகின்றது!

எங்கள் இதயங்களில் என்றும் அது ஒலிக்கும்! உங்கள் குரல்.
அம்மாவின் பிரிவுத் துயரில் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ராஜேஸ்வரி அம்மாவுக்கு இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும்!

25 comments :

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு நேசன்.எத்தனை நினைவலைகள் ஒரு தலைசிறந்த அறிவிப்பாளரைப்பற்றி.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.வாசிக்க வாசிக்கக் கண் கலங்கிவிட்டது.ஆத்மாவுக்கு அமைதியான அஞ்சலிகள் மட்டுமே என் பக்கம் !

அம்பலத்தார் said...

மறைந்த ராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது பிரிவால் வாடும் அவரது உறவுகள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அம்பலத்தார் said...

அஞ்சலிப்பதிவுக்கு ராஜேஸ்வரி அவர்களின் ரசிகர்களில் ஒருவனாக நன்றி சொல்லுறன் நேசன்.

அம்பலத்தார் said...

ராஜேஸ்வரி அவர்களின் கணீர் என்ற குரலுடன் இனிய பாடல்களும் சேர்ந்து ஒலித்த பொங்கும் பூம்புனலை மறக்கமுடியாது, இன்னமும் காதுகளில் ஒலித்திக்கொண்டிருக்கிறது.

அம்பலத்தார் said...

ராஜேஸ்வரியம்மா மறையவில்லை அவரதுபூவுடல்தான் எம்மையெல்லாம் விட்டு பிரிந்து செல்கின்றது. ஆனாலும் அவர் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

தனிமரம் said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு நேசன்.எத்தனை நினைவலைகள் ஒரு தலைசிறந்த அறிவிப்பாளரைப்பற்றி.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.வாசிக்க வாசிக்கக் கண் கலங்கிவிட்டது.ஆத்மாவுக்கு அமைதியான அஞ்சலிகள் மட்டுமே என் பக்கம் !

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் அனுதாபங்கள் மட்டும்தான் என்னாலும் சொல்லமுடியும்.

தனிமரம் said...

அவர் காற்றில் கலந்துவிட்டார் என்று பதிவு சொன்ன வரோ அண்ணாவுக்குத் தான் முதலில் நாம் நன்றி சொல்லனும் அம்பலத்தார்.

தனிமரம் said...

ராஜேஸ்வரி அவர்களின் கணீர் என்ற குரலுடன் இனிய பாடல்களும் சேர்ந்து ஒலித்த பொங்கும் பூம்புனலை மறக்கமுடியாது, இன்னமும் காதுகளில் ஒலித்திக்கொண்டிருக்கிறது.

24 March 2012 03:32// 
தனிமரம் மட்டும் எப்படி இன்னும் பாடல் பிரியனாக இருக்கின்றேன் அவர்களின் பாடல்கேட்ட பொங்கும் பூம்புனல் மற்றக்கத்தான் முடியுமா??அந்த குறியிசை இனி எப்போது கேட்பேன் !ம்

தனிமரம் said...

ராஜேஸ்வரியம்மா மறையவில்லை அவரதுபூவுடல்தான் எம்மையெல்லாம் விட்டு பிரிந்து செல்கின்றது. ஆனாலும் அவர் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

// நிச்சயம் அம்பலத்தார் ஐயா அவர்களின் நினைவுகள் மறக்காது.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Riyas said...

சிறந்ததொரு அறிவிப்பாளரை இழந்துவிட்டோம் நேசன்..

என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

K said...

என்னால் இப்பதிவுக்கு கமெண்டு போட முடியவில்லை நேசன் அண்ணா, எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பதென்று புரியவில்லை!

அவரின் உடல் மட்டும் இந்த உலகை விட்டுப் போய்விட்டதாக நேற்று அறிந்தேன்! அவ்வளவுதான் :-(

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ...
அவர்களின் ஆன்மா இறைவனை சேரட்டும் ,.....

தனிமரம் said...

உண்மைதான் ரியாஸ் இனி இப்படி தேர்ந்த அறிவிப்பாளினியைத் தேசம் கானாது!
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ஐடியா மணிசார் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி கலை வருகைக்கும் கருத்துக்கும்!

Yoga.S. said...

எனது அஞ்சலிகளும்,நேசன் தழல் மூலம்!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்!

Unknown said...

வானோலியில் சாதனை செயடதவர்கள் சிலர் அதில் ஈஸ்வரி அம்மா புகழ் பூத்தவர் இவரின் ஆத்தும இளைப்பாற்றிக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்.

Yoga.S. said...

கா.......... நேரமில்லை!பி....... எ.........!வ.....நேசன்!அ....... எ..........

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

தனிமரம் said...

அம்மா புகழ் பூத்தவர் இவரின் ஆத்தும இளைப்பாற்றிக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன்// எஸ்தர் -சபி வருகைக்கும் இரங்களுக்கும்

தனிமரம் said...

.........!வ.....நேசன்!// வாங்கோ இருக்கேன் யோகாஐயா!

தனிமரம் said...

நன்றி ரத்னவேல் ஐயா வருகைக்கும் இரங்களுக்கும்!

Anonymous said...

ராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...