15 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-17











நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத உறவுகள் கூட  உறவுசேர்வது முக்கியமானவர்களின்  மரண வீட்டில் தான்

.பெரியவர்கள்  ஆசையில் வளர்த்து  விடும் பகையுணர்வு என்பது மாமியார் ஊட்டி வளர்த்து மருமகள் கொள்ளியிட்ட ஈழத்துக் கனவு போலத்தான்!

மக்கள் விடுதலை முன்னனியின்(JVP) புரட்சிக்கனவும் பலரைக் காவு கொண்டது


.அதில் ஜயந்தமாமாவின் இறப்பிற்கு  கல்கமுவயில் இருந்து செல்வா மாமா  வந்த போது தான் ராகுலுக்கும் தெரியும்.

  ஜயந்தமாமியும் தன் செல்வா மாமாவின் மனைவியும்( லீலாவதியும்) உடன்பிறந்த சகோதரிகள் என்று  .

அவர்களுக்கு பிள்ளைகள் இல்லாத குறையைத் தீர்க்க மூத்தமகள் அனோமாவை தாம் கொஞ்சக்காலம் வளர்ப்பதாக கூறவும்

. தமக்கையும்( லீலாவதி )தங்கைதானே  (மெனிக்கே)என்று 5 வயது முதல் அனோமாவை இவர்களுடன் விட்டு விட்டு அவர்கள். கல்கமுவையில் கடை வைத்திருக்கின்றார்கள்  என்று தெரிய வந்தது.

 எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஜயந்தமாமா ஆசைப்பட்டாரோ!

அது அவரின் மரணத்தில் தெரிந்து கொள்ளும் துயரம் ராகுலுக்கு

. .பெரியவர்கள் ஈசன் மாமாவோ  சாந்தி மாமியோ சொல்லாது  ரகசியம் காத்தது எதனால்!

 ராகுலின் வயது போதாது என்றா ?அல்லது பங்கஜம் பாட்டியும் பேரிம்பலத்தாரும்  ஏற்றுக் கொள்ளாத உறவு என்பதாலா ?என்று அவனுக்குள் எழுந்த கேள்விக்கு தென்னக்கோன் மாமா  சொன்னார் நீ பெரியவனாகினதும் சொல்லத் தான் காத்திருக்கச் சொன்னேன்

 .ஆனால் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது

. இவங்க தான் உன் மாமி  லீலாவதி அருகில் இருப்பது துஸாரி.

உன் சின்ன மச்சாள்.

இன்னொரு மாமா அதோ பார் கண்ணாடியுடன் தங்கமணி இருக்கின்றார் ,அவங்க சம்சாரம் விமலா தான் பக்கத்தில் உன் அத்தை.
 உன் மச்சினிமார் பார்த்தாயா 4 பேரும் என்று அவர் சொல்லும் போது எதையும் கேள்வி கேட்கும் காலம் அல்ல அப்போது!.




அப்படித்தான்  அவர்கள்  இவனுக்கு அறிமுகமானது  செத்தவீடு  முடிந்ததும்.  தங்கமணி மாமா தன் குடும்பத்துடன்  போய்  விட்டார்.  அவர் இருப்பது  பசறையில்  என்று பின்னாளில் தெரிந்து  கொண்டான் .

மூத்த  மதினி  தவிர  மற்றவர்கள்  அவனுடன் கதைத்தார்கள்.
  அதுவும்  3வது சின்ன மதினி  ராகுலோடு சிநேகம்  கொண்டாள்
.அவள்  வந்து கதைத்தது  பல்லவிக்கு  பிடிக்கவில்லை.
  அதுவரை  என்னோடு இயல்பாக  பழகியவள்  முறைத்துக்கொண்டும் , சேர்ந்து  சாப்பிடுவதும்  இல்லை  .
எப்போதும்  ஈசன்  மாமா  இருவருக்கும்  கொண்டந்து  தரும் சொக்கொமோல்ட் டொபி .அவள் தான்
எப்போதும் எனக்குத்தருவது  வழக்கம் .   ஜயந்த  மாமாவின்  மரண வீடுக்குப்பின்  அவள் பிரித்துப்பார்த்தது .
அதுவரை  அண்ணன் தங்கையாக  இருந்த மனதில்  புதிய பெர்லின்  சுவர்  வந்தது .

 தங்கமணி மாமா பார்க்க ஜெயஷங்கர் மாதிரி இருந்தார் .
 ஊரில்  அம்மாவினின்  சீலைக்கு பின்   ஒளிந்து  நிற்க்கும்    என்னைப்பார்த்த வருக்கு.
  முன்னரை  விட காலமாற்றத்தில்  அவருக்கு   என்  வளர்ச்சியை    நம்பமுடியவில்லை  .
    அது மட்டும்மில்ல  ராகுல்  இருப்பது  செல்லத்துரை தம்பியின்  சாயலில்!  அன்று மட்டுமா!!
  இன்றும் பலர் அப்படித்தானே  சொல்கின்றார்கள் .
..ஆனாலும் தங்கமணி  மாமா கதைக்காமல்  போனது  அவனுக்குக் ஒருமாதிரித்தான்  இருந்தது.

 காலம் ஒருமாதிரி இருப்பது இல்லை.
 கடிதங்கள்  பல வகை .
நேரு    இந்திராவுக்கு   எழுதியது,  கருணாநிதி  மத்திய அரசுக்கு  எழுதியது, எங்கல்ஸ்-  மார்க்கர்ஸ்  எழுதியது, ஸ்யாம்பெக்ஸ்  இலங்கை  அரசு  எதிர்க்கட்சி கடிதம் போல!
 
  அப்படித்தான்  ஒரு கடிதம் ஊரில்
அம்மாவிடம்    இருந்து  வந்தது.  பங்கஜம் பாட்டிக்கு  உடல் நலம் இல்லை எல்லாரும் வாருங்கள் என்றதும் .
 சாந்திமாமி  உடன  போவோம் .   என்ற  போதும்.
 ஈசன் மாமா கொஞ்சம் பொறு  சம்பளக் கிழமை முடியப்போகலாம் என்று தடுத்தார் .
 அதன் பின்  நாங்களும் போனோம் மீண்டும் ஊருக்கு.
  அது 1990    மேமாதம் இரண்டாவது  வாரம் .  


 தொடரும்
//////
தனிப்பட்ட வேலை மாற்றம் தனிமரம் விரைவில் வலையுலகை விட்டு தற்காலிகமாக வெளியேற இருப்பதால் இனி அதிகம்  தொடரை  உங்கள் முன் கொடுத்துவிட்டு விடை பெறக்காத்திருக்குது!

நட்புடன்- தனிமரம்-நேசன் .
  

14 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம் நேசன்!பொன் சுவார்!!!!!தொடர் எங்கேயோ போவது தெரிகிறது.அடிக்குறிப்பு வேறு!ஒவ்வொருவராகக் கழன்றால் எப்படி?மேற்குலகில் வேலை முக்கியம்.பதிவுலகு எங்கும் சென்ருவிடாது!எனக்குக் கவலையில்லை,ஏனெனில் இங்கே தானே இருக்கிறோம்?சந்திக்க நாள் விரைவில் கைகூடும்!பார்க்கலாம்.

தனிமரம் said...

இரவு வணக்கம் பால் கோப்பி குடியுங்கோ யோகா ஐயா! தவிர்க முடியாத நிலை அதனால் தான் தொடரின் முடிவைச் சொல்லி விட்டு விடைபெறக்காத்திருக்கின்றேன் கழன்றுபோகவில்லை இங்கே தான் இருப்பேன் வருவேன் எப்படியாவது பதிவுலகில்!
நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்!

Yoga.S. said...

சும்மா சொன்னேன்!டொலிபிரன்(DOLIPRANE) போட்டேன்,கொஞ்சம் பரவாயில்லை!கோப்பி இனிமேல் காலையில் தான்,பெட் கோப்பி!எல்லோரும் வேலைக் களையில் உறங்கி விட்டார்கள் போலும்?காலையில் பார்ப்போம்!(ஹேமா பாவம்,கோப்பி பறிபோய் விட்டதே?)

தனிமரம் said...

நல்லாக ஓய்வு எடுங்கள் நாளை மதியம் சந்திங்க்கின்றேன் வேலை அதிகம்.குட் நைட்!

ஹேமா said...

அப்பா கோப்பி குடிச்சால் பிள்ளைக்கும் வரும்தானே.நீங்களே எப்பவும் குடியுங்கோ.எனக்கும் கொஞ்சம் வையுங்கோ யோகா அப்பா.என்ன அடிக்கடி வயித்துவலி.தலைவலி எண்டு சொல்லிக்கொண்டு....உடம்பைக் கவனியுங்கோ கொஞ்சம் !

நேசன் நல்ல பேச்சு வாங்காதேங்கோ.நாங்களெல்லாம் சும்மா சாப்பிட்டுக்கொண்டு வீட்லயே இருக்கிறம்.எங்களுக்கும் வேலை வெட்டிதான்.பதிவுகளை ஒழுங்காப் போடுங்கோ.சும்மா வாறன் போறன் எண்டுகொண்டு....!

பெர்லின் சுவரையும் இடிச்சுப்போட்டாங்கள்தானே.அன்பால இடிக்கப்படலாம் எதுவும் !

ஹாலிவுட்ரசிகன் said...

எப்பவும் பர்சனல் வாழ்க்கைத் தான் ஃபர்ஸ்ட். ஆல் நெக்ஸ்ட்.

சீக்கிரம் திரும்பி வாருங்கள். காத்திருக்கிறேன்.

தனிமரம் said...

வாங்க ஹேமா அக்காள்!
கொஞ்சம் அதிகம் வேலையில் கவனம் தேவையாக இருப்பதால் தான் தற்காலிகமாக ஒடுகின்றேன்.உங்கள் அன்புக்கு நன்றி .பேர்லின் சுவர் பிரபல்யம் தானே உடைக்கப்பட்டாலும்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

என்ன நேசன் அண்ணா மறுபடியும் ஓய்வு எடுக்கப் போறீங்களா?

K said...

நேசன் நல்ல பேச்சு வாங்காதேங்கோ.நாங்களெல்லாம் சும்மா சாப்பிட்டுக்கொண்டு வீட்லயே இருக்கிறம்.எங்களுக்கும் வேலை வெட்டிதான்.பதிவுகளை ஒழுங்காப் போடுங்கோ.சும்மா வாறன் போறன் எண்டுகொண்டு....!//////

சரியாச் சொன்னீங்க ஹேமா! என் கருத்தும் இதுவே!

தனிமரம் said...

வணக்கம் சகோதரா!
முகத்தை மூடி வந்தால் எப்படி பதில் சொல்வது கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகின்றது என் முதலாளிக்கு அதனால் தான்.

தனிமரம் said...

ஐயோ ஹேமா அக்காள் இப்படி பேசுறா என்றால் அதில் மணிசாரும் சேர்ந்துவிட்டாரே .விரைவில் தொழில் மாற்றம் வரும் போது வழமைபோல தனிமரம் தொடரும் தற்காலிகமாகத் தானே நிரந்தரம் இல்லை.எல்லோருக்கும் பல வேலைகளுக்கு இடையில் தான் பதிவுகள் எழுதுகின்றோம் ஆத்ம திருப்திக்கு ஆதே போல மற்றவர்கள் அத்ம திருப்தியையும் நான் மதிக்க வேண்டுமே மணிசார்!
நன்றி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் .வருகைக்கும் கருத்துரைக்கும் இன்னொரு நன்றி சார்!

Unknown said...

மலையக பேச்சு வழக்குகள் கேட்டு றொம்ப நாளாச்சு உங்கள் மூலம் மீண்டும் கேட்கிறேன்.

தனிமரம் said...

மயக்கும் மலையக மொழி உங்களுக்குப் பிடிக்கும் அளவுக்கு எழுதியிருக்கின்றேன் எனும் போது சந்தோஸம் எஸ்தர்-சபி.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!